இந்தியா தான் அடுத்த ஐரோப்பா - கனவு திட்டத்தை தீட்டும் புடின்
வாயிலாக ரஷ்யா-வின் தற்போதைய முக்கிய வர்த்தகக் கூட்டணி நாடுகளாக இருப்பது சீனா, இந்தியா, ஈரான், வளைகுடா நாடுகள் மற்றும் இதர சிறு மற்றும் நடுத்தரச் சோவியத் நாடுகள் தான்.
இதிலும் குறிப்பாக இரு தரப்பும் அதிகப்படியான லாபத்தையும், வர்த்தகத்தையும் அடைய கூடிய வகையில் ரஷ்யாவுக்கு இருக்கும் ஓரே வர்த்தகச் சந்தை இந்தியா என்பதால் பிரம்மாண்ட திட்டத்தை உருவாக்கி வருகிறது ரஷ்யா.
ரஷ்யா கடந்த 10 வருடத்தில் ஐரோப்பா மத்தியில் கட்டமைக்கப்பட்ட கனெக்டிவிட்டி, கேபிட்டல் மார்கெட்ஸ், பைனான்சியல் இன்பராஸ்டக்சர் ஆகியவற்றைத் தற்போது இந்தியா உடன் அமைக்க முடிவு செய்துள்ளது.

ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடை
இதன் மூலம் ரஷ்யா - இந்தியா மத்தியிலான வர்த்தகம் 120-150 பில்லியன் டொலர் வரையில் உயரும் என ரஷ்யாவின் அலுமினிய தொழிலதிபரான Oleg Deripaska தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக ரஷ்யா தனது பொருளாதாரத்தை ஐரோப்பிய சந்தையை நம்பி தான் கட்டமைத்து வந்தது. இதனால் தற்போது ரஷ்யா - ஐரோப்பியா மத்தியிலான வர்த்தகம் 750 பில்லியன் முதல் 1 டிரில்லியன் டொலராக உள்ளது என Oleg Deripaska தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது உக்ரைன் மீதான போரின் காரணமாக அறிவித்த பொருளாதார தடையால் இரு தரப்பு வர்த்தகமும் பெரிய அளவில் குறைந்துள்ளது.
தற்போது இதேபோன்ற கட்டமைப்பை ரஷ்யா இந்தியா உடன் இணைக்கத் திட்டமிட்டு வருகிறது. மேலும் Oleg Deripaska ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடன் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri