ஐரோப்பிய நாடொன்றில் பாரியளவில் வேலைவாய்ப்பு - இலங்கை, இந்தியர்களுக்கு வாய்ப்பு
ரஷ்யா தனது தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு காண இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் சீனாவை நாடுவதாக தெரியவந்துள்ளது.
ரஷ்யா எதிர்கொள்ளும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு உக்ரைன்-ரஷ்யா போர் ஒரு காரணம் என்றும் ப்ளூம்பெர்க் நியூஸ் சமீபத்தில் செய்தி வெளியிட்டது.
இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் ரஷ்ய பொருளாதாரத்திற்கு 1.1 மில்லியன் தொழிலாளர்கள் கூடுதலாக தேவைப்பட்டாலும், அந்த இடைவெளியை நிரப்ப ரஷ்யாவிடம் போதுமான தொழிலாளர்கள் இல்லை என செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பணி அனுமதி
கடந்த ஆண்டு மட்டும் 240,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ரஷ்யா பணி அனுமதி வழங்கியுள்ளது. இது 2017 ஆம் ஆண்டின் பின்னர் வழங்கப்பட்ட அதிகபட்ச பணி அனுமதி என செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியது.

ரஷ்ய நகர சபைகளில் வெற்றிடமாக உள்ள வேலை வெற்றிடங்களை நிரப்ப இந்தியா மற்றும் இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளிலிருந்து தொழிலாளர்களை ரஷ்யா ஆட்சேர்ப்பு செய்யத் தொடங்கியுள்ளது.
மேலும் இந்த தொழிலாளர்கள் ரஷ்ய நகரங்களில் பனி அகற்றுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள் என செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் கட்டுமானம், கிடங்குகள் மற்றும் பிற நகர்ப்புற வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை ரஷ்யா அதிகரித்துள்ளது எனவும் செய்தி சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
ரஜினியுடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்னையை சுற்றிய நடிகை.. நேரில் பார்த்த அனிருத்தின் தந்தை Cineulagam
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam