இலங்கையுடனான உறவுகளை விரிவுபடுத்த ரஷ்யா விருப்பம்
இலங்கையுடன் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உறவுகளை விரிவுபடுத்த ரஷ்யா விருப்பம் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் யூரி பி.மட்டேரி புதிதாக நியமிக்கப்பட்ட வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, வெளியுறவு அமைச்சர் பீரிஸ் இலங்கையின் நீண்டகால நட்பு மற்றும் ரஷ்யாவுடனான பரந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும் பலதரப்பு கோட்பாடுகளில் கொள்கை மற்றும் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து இலங்கைக்கு ரஷ்யா அளித்த ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இதன்போது, ரஷ்யத் தூதுவர், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா, அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான பல துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதில் ரஷ்யாவின் ஆர்வத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri