இரவோடு இரவாக ரஷ்யா மீது தாக்குதல்! புடின் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
உக்ரைனிய இராணுவம் ரஷ்யாவின் பிரையன்ஸ்க்(Bryansk) பிராந்தியத்தின் எல்லைக்கு அப்பால் உள்ள கிராமத்தில் நேற்று இரவு(29.04.2023) ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த ஷெல் தாக்குதலை தொடர்ந்து ரஷ்ய கிராமத்தில் அவசரகால நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனின் தாக்குதல்
உக்ரைனின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பிராந்தியத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் போகோமாஸ் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த ஷெல் தாக்குதலில் 4 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டுள்ளதுடன் 2 பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மக்கள் குடியிருப்பு கட்டிட பகுதி ஒன்று முழுமையாகவும், இரண்டு வீடுகள் பகுதியளவும் அழிக்கப்பட்டுள்ளன.
மேலும் ரஷ்ய கிராமத்தில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலுக்கு உக்ரைனிய தலைவர்களை குற்றம் சாட்டியுள்ளார்.
அவசரகால நிலை பிரகடனம்
The death toll after the night shelling of the village of Suzemka in the #Bryansk region, #Russia increased to four. pic.twitter.com/5ThAFCqihQ
— NEXTA (@nexta_tv) April 30, 2023
இந்நிலையில் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்ட கிராமத்தில் ரஷ்யா அவசர கால நிலையை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் ஷெல் தாக்குதலால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றும் பணி அப்பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதலின் போது, இரு நாட்டு இராணுவங்களும் பொதுமக்களை குறிவைப்பது இல்லை என்று அறிவித்து வந்தாலும், பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 1 மணி நேரம் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
