உக்ரைன் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள ரஷ்யா: செயற்கைகோள் புகைப்படத்தால் அதிர்ச்சி
ரஷ்யா, உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், தற்போது வெளியாகியுள்ள செயற்கைகோள் புகைப்படங்கள் ரஷ்யாவின் இராணுவ தளவாடங்களின் வரிசை அமைப்பை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ஆதரவு தெரிவிக்கவே, ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின், சீனா ஜனாதிபதி ஜிங் பிங்கை காணொலி வாயிலாக சந்தித்து பேசியுள்ளார்.
மேலும் உக்ரைன் மேல் ரஷ்யாவிற்கு போர்தொடுக்கும் எண்ணம் இல்லை எனவும், ஆனால் உக்ரைனை நேட்டோ நாடுகளுடன் இணைத்தால் அது உலக அமைதியை குலைக்கும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும் அதில் ரஷ்யா எதிர்பார்க்கும் வாக்குறுதிகளை நேட்டோ நாடுகள் வழங்க மறுத்து வருகின்றது.
இந்த நிலையில் ரஷ்யாவின் crimea பகுதிகளில் உள்ள இராணுவ தளவாடங்களின் வரிசை அமைப்பை உலகிற்கு காட்டும் விதமாக பெப்ரவரி 1ம் திகதி எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதில் இராணுவ வீரர்களின் முகாம் அமைப்பு, ராணுவ தளவாடங்கள் எண்ணிக்கை மற்றும் அவைகளின் வரிசை அமைப்பு போன்றவை இந்த செயற்கைகோள் புகைப்படம் துல்லியமாக காட்டுகின்றது.