அமெரிக்காவின் நடவடிக்கையையடுத்து அதிரடியாக உயர்ந்துள்ள எண்ணெய் விலை
உலக வர்த்தக சந்தையில் எண்ணெய் விலைகள், இன்று(20) உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஈரான் கொடியுடன் சென்ற சரக்கு கப்பலை தடுத்து கைப்பற்றியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததையடுத்து இந்த உயர்வு ஏற்பட்டது.
எண்ணெய் விலைகள்
அதில், ஹோர்மூஸ் கடலிணை வழியாக செல்லும் வணிக கப்பல்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வழிக்கு நெருங்கும் எந்தக் கப்பலும் தாக்கப்படும் என்றும் ஈரான் கூறியது.
இதன் விளைவாக, எண்ணெய் விலை அதிகரித்தது.

Brent crude எண்ணெய் விலை 4.74% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 94.66 அமெரிக்க டொலராக (சுமார் £70.11) இருந்தது. அதே நேரத்தில் West Texas Intermediate (WTI) 5.6% உயர்ந்து 88.55 டொலராக இருந்தது.
எரிசக்தி சந்தைகள், கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானை தாக்கியதிலிருந்து கடும் மாற்றங்களை சந்தித்து வருகின்றன.
அதற்குப் பதிலாக ஈரான், ஹோர்மூஸ் கடலிணை வழியாக செல்லும் கப்பல்களை இலக்காகக் கொள்ளும் என மிரட்டியது.
இந்த ஹோர்மூஸ் கடலிணை வழியாக உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) போக்குவரத்து நடைபெறுகிறது.
ஆறு மணிநேரமாக மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! கடலின் நடுவில் அதிரடி காட்டிய அமெரிக்கா - வெளியான காணொளி