குண்டு மழை பொழியும் ரஷ்யா! நாலா புறமும் சூழப்பட்டுள்ள தெற்கு உக்ரைனின் பிராந்திய மையம்! - செய்திகளின் தொகுப்பு
குண்டுகளைப் பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் ரஷ்ய ராணுவப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கீவ் நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 6வது நாளாகப் போர் தொடுத்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பிலிருந்து ரஷ்யா பின்வாங்கத் தயாராக இல்லை.
உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷ்யா இறங்கி உள்ளது. தொடர்ந்து உக்ரைனின் ராணுவ தளங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடுத்து வருகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,