உக்ரைன் மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் தென்பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது ரஷ்யா இன்று(23.11.2022) தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
சபோரிஜியா பகுதியில் உள்ள வில்னியான்ஸ் என்ற நகரின் மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
மக்களுக்கு சேதம்

தாய் குழந்தையை பிரசவித்து ஒரு சில நிமிடங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வைத்தியர் ஒருவரும் கட்டிட இடிபாடுகளிற்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதியின் பதிலடி

குறிப்பிட்ட வைத்தியசாலை உள்ள பகுதியை நோக்கி ரஷ்ய படையினர் பாரிய ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா ஒன்பது மாத போரினால் சாதிக்க முடியாததை பயங்கரவாதம் கொலை மூலம் சாதிக்க முயல்கின்றது. அது ஒருபோதும் சாத்தியமாகாது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri