ரஷ்யாவிடம் பின்வாங்கிய அமெரிக்கா - விடாப்பிடியில் வடகொரியா!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தற்போது பல முனைகளில் காணப்படும் மோதல்களுக்கு ஓய்வை வழங்கி, எதிர்காலத்தில் அணுவாயுத போர் ஏற்படுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக பொது இணக்கத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த 3 ஆம் திகதி இது சம்பந்தமான இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் இந்த நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. அணுவாயுத போரில் என்றும் வெற்றி பெற முடியாது எனவும் எந்த வகையிலும் அப்படியான போரில் ஈடுபட்டு விடக் கூடாது என இந்த இணக்கப்பாட்டு உடன்படிக்கை வலியுறுத்துகிறது.
அணுவாயுதங்களை குறைக்கும் சர்வதேச இணக்கப்பாடு தொடர்பான 10வது மாநாடு ஜனவரி மாதம் நடைபெறவிருந்தது. கொரோனா தொற்று காரணமாக மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர், இந்த இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள உலக வல்லரசுகள், அணுவாயுத போரை தடுப்பதற்கு தேவையான உறுதியை உலகிற்கு வழங்கியுள்ளனர்.
இந்த அணுவாயுதங்கள் இருக்கும் வரை அவற்றை தற்பாதுகாப்பு, போரை தவிர்ப்பது, போரை தடுக்க தலையிடுதல் போன்றவற்றுக்காக பயன்படுத்த வேண்டும் என இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த யோசனையை 1985 ஆம் ஆண்டு அன்றைய சோவியத் யூனியன் ஜனாதிபதியாக பதவி வகித்த மிக்கையில் கர்பச்சோவ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரேகன் ஆகியோர் ஜெனிவாவில் முன்வைத்திருந்தனர்.
இதன் பின்னர் 37 ஆண்டுகளுக்கு பிறகு இப்படியான யோசனை வெளியாகியுள்ளது. எது எப்படி இருந்த போதிலும் வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மேற்கொண்டு வரும் அணுவாயுத பரிசோதனைகள் சம்பந்தமாக உலக வல்லரசு நாடுகள் இடையில் பனிப்போர் இருப்பது இரகசியமான விடயமல்ல.
கடந்த சில வாரங்களாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உக்ரைன் நெருக்கடி தொடர்பில் ராஜதந்திர மோதல்கள் ஏற்பட்டன. இது 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்கா இடையில் கையெழுத்திடப்பட்ட அணுவாயுத பரல் தடுப்பு மற்றும் நேட்டோ அமைப்பை விரிவுப்படுத்துவது சம்பந்தமான உடன்படிக்கை தொடர்பிலும் இரு நாடுகளுக்கும் இடையே கடும் ராஜதந்திர பிரச்சினைகளை உருவாகியது.
தேவை ஏற்படுமாயின் இராணுவ தீர்வை மேற்குலகிற்கும், அமெரிக்காவுக்கும் வழங்க தயங்க போவதில்லை என ரஷ்ய எச்சரித்த பின்னர், அமெரிக்க பேச்சுவார்த்தை நடத்த இணங்கியது. இதனிடையே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தாய்வான் சம்பந்தமாக மோதலான நிலைமை உருவாகியது.
இறுதியில் இரண்டு சீன தேசங்களை அங்கீகரிப்பதில்லை என அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் சீனாவுக்கு உறுதியளித்தது. இவ்வாறான நிலைமையில், உலகம் முழுவதும் பல நாடுகளிடம் 13 ஆயிரம் அணுவாயுதங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ் தெரிவித்திருந்தார்.
மிக சிறிய தவறான புரிதல் அல்லது தவறான தீர்ப்பு காரணமாக ஏற்படக் கூடிய அணுவாயுத மோதலால் பூமியில் வாழும் மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களும் அழிந்து போகும் அச்சுறுத்தலை எதிர்நோக்கி இருப்பதாகவும் இதன் முடிவுதான் என்ன? எனவும் குட்ரஸ், உலக வல்லரசு நாடுகளிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
1970 ஆம் ஆண்டு அணுவாயுதங்களை தவிர்க்கும் சர்வதேச உடன்படிக்கையில் 191 நாடுகள் கையெழுத்திட்டிருந்தன. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இதில் கையெழுத்திடவில்லை. வடகொரியா இந்த உடன்படிக்கையில் உள்ள அனைத்து ஷரத்துக்களை நிராகரித்தது.
தமது தற்காப்புக்காக அனைத்து நாடுகளும் அணுவாயுதங்களை வைத்திருக்கவும் தயாரிக்கவும் அனுமதி வழங்க வேண்டும் என்ற சர்வதேச எண்ணக்கருவின் அடிப்படையில், இருந்து செயற்பட்டு, தொடர்ந்தும் அணுவாயுத பரிசோதனைகளில் ஈடுபட்டு வரும் உலகில் ஒரே ஒரு நாடு வடகொரியா என கருதப்படுகிறது.
கட்டுரை மூலம் - லங்காருத்
மொழியாக்கம் - ஸ்டீபன் மாணிக்கம்

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
