ஸ்பூட்னிக் வி எதிர்ப்பு தடுப்பூசியை ஒரு குப்பி 9.95 அமெரிக்க டொலருக்கு இலங்கைக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ள ரஷ்யா
ரஷ்யா, தனது ஸ்பூட்னிக் வி எதிர்ப்பு கோவிட் தடுப்பூசியை ஒரு குப்பி 9.95 அமெரிக்க டொலருக்கு இலங்கைக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 6.5 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான கட்டளை விரைவில் வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விநியோக அட்டவணையின் அடிப்படையில் 500,000 குப்பிகள் ரஷ்யாவில் இருந்து தருவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சீனாவின் சினோபார்ம் கோவிட் தடுப்பூசி இலங்கையில் அவசரகால பயன்பாட்டின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 600,000 சினோபோர்ம் தடுப்பூசி குப்பிகள் இன்னும் ஒரு வார காலப்பகுதியில் பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்படும் என சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 13 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam