உக்ரைன் போரில் முதல் முறையாக அமெரிக்கா நேரடியாக ஈடுபாடு - ரஷ்யா குற்றச்சாட்டு
உக்ரைன் போரில் முதல் முறையாக அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைன் படைகள் பயன்படுத்தும் அமெரிக்கத் தயாரிப்பான ஹிமார்ஸ் பீரங்கிகளுக்கான இலக்குகளை அமெரிக்கா அங்கீகரிப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டினார்.
இது குறித்து லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கொனாஷென்கோவ் கருத்து வெளியிடுகையில், உக்ரேனிய அதிகாரிகளுக்கு இடையே இடைமறித்த அழைப்புகள் இந்த தொடர்பை வெளிப்படுத்தியதாக கூறியுள்ளார்.
பொதுமக்களின் மரணங்களுக்கு அமெரிக்காவே காரணம்
அமெரிக்க அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டு குறித்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. உக்ரைனில் அமெரிக்கா "proxy போர்" நடத்துவதாக ரஷ்யா முன்பு குற்றம் சாட்டியது.
டான்பாஸ் மற்றும் பிற பகுதிகளின் குடியேற்றங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொது மக்கள் உள்கட்டமைப்பு வசதிகள் மீது உக்ரைன் அங்கீகரித்த அனைத்து ராக்கெட் தாக்குதல்களுக்கும் நேரடியாகப் பொறுப்பேற்கும் பைடன் நிர்வாகமே பொதுமக்களின் மரணங்களுக்கு காரணம் என்று கொனாஷென்கோவ் கூறினார்.
ஹிமார்ஸ் என்பது பல ராக்கெட் அமைப்பாகும், இது 70 கிமீ (45 மைல்) தொலைவில் உள்ள இலக்குகளை நோக்கி துல்லியமாக வழிகாட்டும் ஏவுகணைகளை ஏவ முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது