ரஸ்யாவுக்கு எதிரான மேற்கத்தைய தடைகள்! நாடுகளுக்கு இடையில் இணக்க இடைவெளி!
உக்ரெய்னுக்கு எதிரான ரஸ்ய ஆக்கிரமிப்பு தொடர்கிறது.
இந்தநிலையில் ரஸ்யா, உக்ரெய்னுக்கு எதிராக நடத்தும் படையெடுப்பிற்கு மத்தியில் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளில் இடைவெளிகள் உள்ளதாக விமர்சனங்கள் கூறப்பட்டு வருகின்றன.
மேற்கத்தைய நாடுகளின் புதிய தடை நடவடிக்கைகள் ரஸ்யாவின் பொருளாதாரத்தை மிகவும் கடுமையாக பாதிக்கும்.
ஆனால் இன்னும் சாத்தியமான இடைவெளிகள் உள்ளன என்பதை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், பெரிய ரஸ்ய வங்கிகளுக்கு எதிராக விதித்துள்ள பொருளாதாரத் தடைகளில் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான VATஅடங்குகிறது. அதன் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படுகின்றன.
எனினும் மற்றொரு ரஸ்ய வங்கியான Sberbank பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
உக்ரேனிய அரசாங்கம் ரஸ்யாவுக்கு எதிராக மேலும் பல தடைகளை விரும்புகிறது -
குறிப்பாக ஸ்விஃப்ட்(SWIFT) எனப்படும் சர்வதேச கட்டண முறையிலிருந்து ரஸ்யாவைத் துண்டிப்பதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அது மேற்கத்தைய நாடுகளிடம் கோரியுள்ளது.
அமெரிக்காவும் இங்கிலாந்தும் அத்தகைய நடவடிக்கைக்கு ஆதரவாக உள்ளன,
எனினும் சில ஐரோப்பிய நாடுகள், இந்த நடவடிக்கைகள், தங்கள் சொந்த வங்கிகளி;ன் செயற்பாடுகளை பாதிக்கும் என்று அஞ்சுகின்றன.
இந்தநிலையில் பொருளாதாரத் தடைகள், விரைவாக தாக்கங்களை ஏற்படுத்தாது. எனினும் ரஸ்யாவுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
புட்டினின் அரசியல் மற்றும் இராணுவ திட்டங்களில்; மாற்றத்தை கொண்டு வர பொருளாதார அழுத்தம் அவசியமாகிறது.

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
