வறுமையினுடைய தாக்கங்களை உணர்ந்து கொண்டவர்களாக திகழும் கிராமப் பெண்கள்
வறுமையினுடைய தாக்கங்களை உணர்ந்து கொண்டவர்களாக கிராமங்களில் வாழும் பெண்கள் காணப்படுகின்றனர் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் இன்று (11) நடைபெற்ற விறிபனையும் கண்காட்சியும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நிச்சயமாக நாடு ஒரு தேசம் அபிவிருத்தி அடைய வேண்டுமாக இருந்தால் கிராமங்களில் உள்ள வறுமை குறைக்கப்பட வேண்டும்.
உதவி திட்டங்கள்
எனவே கிராமங்களில் உள்ள பெண்களை வலுப்படுத்த வேண்டும். இந்த வேலை திட்டமானது ஆற்றல்களை வழங்கி உதவி திட்டங்களை கொடுத்து கிராமமட்டங்களிலே காணப்படும் மூலப் பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இன்று காட்சிப்படுத்தப்படுகின்றன.
இது நமது மாவட்டத்தின் அபிவிருத்தியை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் ஒரு வேலைத்திட்டமாகவும் இருக்கின்றது. இது போன்ற வேலை திட்டங்கள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.









