ரூபாயை மிதக்க விட்டால் டொலர் 300 ரூபாவாக உயரும்
அமெரிக்க டொலருக்கு இணையாக இலங்கை ரூபாயை மிதக்கவிட இடமளிக்குமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்தாலும் ரூபாயை மிதக்கவிட்டால், முதலில் டொலரின் பெறுமதி சுமார் 300 ரூபாயாக அதிகரிக்கும் என ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர (Dayasri Jayasekara) தெரிவித்துள்ளார்.
குருணாகலில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ரூபாயை டொலருக்கு நிகராக மிதக்க விடுமாறு பெரிய கோரிக்கை விடுக்கப்படுகிறது. அப்படி செய்தால், டொலரின் பெறுமதி 300 ரூபாய் வரை உயரும்.அதன் பின்னர், ஏறி, இறங்கி 250 ருபாய் வரை குறையும்.
இதனால், முடிந்தளவுக்கு அனைத்தையும் நாட்டுக்குள் உற்பத்தி செய்யும் வேலைத்திட்டதை உருவாக்க வேண்டும். இதன் காரணமாக வாழ்வாதார அபிவிருத்திக்காக அமைச்சர் பசில் ராஜபக்ச லட்சம் வேலைகள் என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இதன் ஊடாக கிராதத்திற்குள் உற்பத்தி செய்ய தேவையான லேலைகளை நாம் செய்வோம். அதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்கியுள்ளோம் என தயாசிறி ஜயசேகர



