ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி பொருட்களின் விலைகளில் ஏற்படுத்திய தாக்கம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியானது பொருட்கள் சேவைகளில் கடும் தாக்கத்தை செலுத்தி வருவதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் 10 முதல் 15 வீதம் வரையில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியானது இரண்டு துறைகளில் பொருளாரத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருட்கள், மருந்து வகைகள், எரிபொருள் போன்ற நுகர்வுப் பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்களின் கொள்வனவு இயலுமை வீழ்ச்சியடைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை உயர்வ உற்பத்தி துறையை மோசமாக பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணம்,எரிபொருள், மருந்துப் பொருட்கள் என்பன தவிர்ந்த ஏனைய அத்தியாவசிய பொருட்கள் ஏற்கனவே ஏற்கனவே விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியான விலை அதிகரிப்பு நுகர்வோரை மோசமாக பாதிக்கும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, டொலரின் பெறுமதி ஸ்திரமடையும் வரையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடையக் கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri