2026இல் ரூபாவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் - மத்திய வங்கியின் தகவல்
2026ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதம் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த வெள்ளிக்கிழமை (26.06.2026) வர்த்தக முடிவில் அமெரிக்க டொலரின் வாங்கும் விலை 332.22 ரூபாவாகவும், விற்கும் விலை 341.87 ரூபாவாகவும் இருந்தது.
இலங்கை ரூபாயின் தற்போதைய மதிப்புச் சரிவு
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கடந்த மாதம் கூறுகையில், இலங்கை ரூபாயின் தற்போதைய மதிப்புச் சரிவானது, 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியிலிருந்து அடிப்படையில் வேறுபட்டது.
இம்முறை இது உள்நாட்டு நிர்வாகக் குறைபாடுகளை விட உலகளாவிய சூழல்களாலேயே ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார்.

முற்றிலும் உள்நாட்டுக் காரணங்கள்
கடந்த 2022ஆம் ஆண்டின் மார்ச் - ஏப்ரல் மாதங்களில், மற்ற பிராந்திய நாணயங்கள் நிலையாக இருந்தபோது, முற்றிலும் உள்நாட்டுக் காரணங்களால் ரூபாயின் மதிப்பு 370 வரை சரிந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், தற்போது உலகளாவிய நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் அமெரிக்க டொலர் வலுப்பெற்று வருவதால், பிராந்திய நாடுகளில் நாணய மதிப்புச் சரிவு ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam