அடுத்த ஒப்ரேஷனுக்கு தயாராகும் ஆளும் தரப்பு? நடக்கும் பேச்சுவார்த்தைகள்!
எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் நாடாளுன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு அமைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்வது தொடர்பாக மாத்திரமல்லாது, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தெரியவருகிறது.
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க முடிந்த பணத் தொகை சம்பந்தமாகவும் பேச்சுவார்த்தை மேசையில் கலந்துரையாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் வரவு செலவுத்திட்டத்தின் போது பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவினர். இதற்காக பெருந்தொகை பணம் கைமாறிய கூறப்பட்டது.
இந்த நிலையில், எதிர்வரும் 12 ஆம் திகதி அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri