பேர்ன் மாநிலத்தில் கோவில்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
கடந்த வெள்ளி (17) சுவிற்சர்லாந்தின், நடுவனரசு புதிய கோவிட் தொற்று அறிவிப்பினை அறிவித்திருந்தது. இது தவிர மாநில அரசுகள் விரும்பின் தமது விதிகளை மேலும் இறுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பேர்ன் மாநிலத்தில் கோவில்கள் இவ்விதிகிளை குறைந்தது 24.01.2022 வரை இவ்வாறு ஒழுக வேண்டும்.
எங்கும் எப்போதும் அனைவரும் முகவுறை அணிந்திருக்க வேண்டும். உணகவங்கள், நிகழ்வுகள், மன்றச் செயற்பாடுகள், யோகாசன வகுப்பு போன்ற செயல்களுக்கு தடுப்பூசி முழுமையாக இட்டுக்கொண்டவர்களும், கோவிட் தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களும் மட்டுமே உள்நுழையலாம்.
நோய்தொற்று இல்லை எனும் சான்றிதழ் இவ்வாறு கட்ட உள்ளரங்கிற்குள் நுழைய செல்லுபடியாகாது.
பொருத்தமான இருக்கையில் போதிய இடைவெளி விட்டு மட்டுமே உணவு உண்ணப்படலாம், நின்றுகொண்டும், அசைந்துகொண்டும் உணவு உண்ணலாகது.
கோவிலில், மன்றத்தில் பதிந்து வேலை செய்பவர்களுக்கு இவ்விதிகளில் விலக்கு உண்டு. ஆனால் தொண்டர்கள், அடியார்கள் உள்நுழைவோர் கட்டாயம் 2ஜி விதியை கடைப்பிடிக்க வேண்டும்.
ஊசி போடாத அல்லது நோயில் இருந்து குணம அடையாத ஒருவர் கோவிலுக்குள் நுழையும் இன்னொருவரை தடுப்பூசி - நோய்த்தொற்றில் இருந்து குணம் அடைந்த சான்றினைச் சோதனை செய்யலாகாது.
பேர்ன் மாநிலத்தில் சமயங்களின் இடங்களுக்குள் 50 ஆட்கள்வரை தடுப்பூசிபோடாதவர்களும், தம்மை வருகைப்பதிவுநிரலில் (பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம்) பதிவுசெய்து உள்நுழையலாம். கோவில் விரும்பின் 2ஜி விதியை மட்டும் கடைப்பிடிக்கலாம்.
இவ்விதிகள் ஏனைய மாநிலங்களில் வேறுபடலாம். ஆகவே அந்தந்த மாநிலத்தின் இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள விதிகளை சென்று காண்க. இவ்வாறான கடுமையான சட்ட விதிகளை மாநில அரசு விதித்துள்ளது.