சிங்கள-முஸ்லிம் பகுதிகளில் இனவாதத்தை விதைத்து வாக்குகளை பெற்ற ஆட்சியாளர்கள் (Photos)
சிங்கள தலைவர்கள், சிங்கள-முஸ்லிம்களின் பகுதிகளுக்கு சென்று இனவாதத்தை விதைத்து வாக்குகளை பெற்று வெற்றியுடன் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருதுவில் நேற்று முன்தினம் (01.02.2023) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சிங்களவர்கள் பகுதியிலும் இனவாதத்தை விதைத்தனர்...
பிள்ளைகளுக்கு நல்ல கல்வி இருக்கின்றதா?, வைத்தியசாலையில் மருந்துகள் தட்டுப்பாடு, விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய போதியளவு உரம் இல்லை, விவசாயம் செய்ய வளம் இருந்தும் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்கின்றார்கள்.
இவையெல்லாம் வாக்களித்த மக்களுக்கு அரசாங்கம் என்ன செய்தது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். தேர்தல் காலம் வாக்குகளை பெறுவதற்காக சிங்கள தலைவர்கள், சிங்களவர்கள் பகுதிகளுக்கு சென்று இனவாதத்தை விதைத்து வாக்குகளை பெறுகின்றனர்.
அதேபோல் முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று இனவாதத்தை விதைத்து வாக்குகளை பெற்று வெற்றியுடன் அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர்.
ஆட்சியாளர்கள் இனவாதத்தை உருவாக்கி ஆட்சிக்கு சென்றனர். இதன் மூலம் என்ன நடந்தது? தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த நாம் செயற்படுவோம். ஒற்றுமையை ஏறபடுத்த திசைகாட்டியால் மாத்திரம் முடியும்.
புதிய அரசியல் பயணம்
மாலைதீவில் கடல் வளத்தை கொண்டு முன்னோக்கி செல்லும் எமது நாட்டு ஆட்சியாளர்கள், மக்களுக்காக என்ன திட்டங்களை செய்திருக்கின்றனர்? நாட்டின் சுற்றுலாத்துறை, விவசாயம், கடல் வளம், கணியம், உட்பட ஏனைய வளங்களைப் சரியாக பயன்படுத்தி நாம் நாட்டை கட்டியேழுப்புவோம்.
ஒலுவில் துறைமுகத்தில் அதிக பணம் செலவழித்தும் கூட கப்பல் எதுவும் வரவில்லை. இறுதியில் மீனவர்களுக்கும் பயனில்லை.
ஹக்கீம், ரிசாத், ஹரீஸ், மகிந்த, ரணில் ஆகியோர் தமது பிரச்சினையை மட்டுமே தீர்த்து கொள்கின்றனர். ஆனால், அவர்களால் மக்களுக்கான தீர்வுகள் ஒன்றுமில்லை. நாம் ஒன்றிணைந்து மக்களின் பிரச்சினையை தீர்க்கவே உள்ளோம்.
மேலும், தெற்கு, மேற்கு, கிழக்கு, வடக்கு, உட்பட ஏனைய மாகணங்ககளில் அனைத்து இன மக்களின் ஒத்துழைப்புடன் ஆட்சியை நடத்த எம்மால் முடியும். அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக இருக்க செயற்படுவோம். பழைமைவாத அரசியலை இல்லாமல் செய்து புதிய அரசியல் பயணத்த்துடன்பயணிக்க திசைகாட்டியுடன் பயணியுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.














தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam
