ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள மற்றுமொரு கடும் எச்சரிக்கை.. மீண்டும் வலுக்கும் போர்பதற்றம்
ஈரான் அரசாங்கத்திற்கு அமெரிக்கா மீண்டும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) விவகாரத்தில் ஈரான் மேற்கொள்ளும் கெடுபிடிகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ள ரூபியோ, ஹார்முஸ் நீரிணை திறந்தே இருப்பதாக ஈரான் கூறுவதை நிராகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானிடம் அனுமதி பெற்று, அவர்களுக்குப் பணம் செலுத்தினால் மட்டுமே கப்பல்கள் செல்ல முடியும் என்பதும், இல்லையெனில் தாக்குதல் நடத்துவோம் என்பதும் நீரிணையை திறந்து வைத்திருப்பதாக அர்த்தமாகாது என தெரிவித்துள்ளார்.
ஈரானின் நிலை..
சர்வதேச நீர்வழிகளில் யார் செல்ல வேண்டும் என்பதை ஈரானே தீர்மானிப்பதையும், அதற்காக அவர்கள் கட்டணம் வசூலிப்பதையும் அமெரிக்கா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.

பெப்ரவரி இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானைத் தாக்கியதில் இருந்து, இந்த குறுகிய நீர்வழிப் பாதையில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதனால் உலகளவில் எரிபொருள் விலை உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் தற்போதுள்ள இக்கட்டான பொருளாதாரச் சூழலில் இருந்து வெளியேற, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதில் தீவிரமாக இருப்பதை ரூபியோ ஒப்புக்கொண்டார்.
எந்தவொரு ஒப்பந்தமும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் திட்டவட்டமாகத் தடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஈரானில் பணவீக்கம் அதிகரித்துள்ளதுடன், ஊதியம் வழங்குவதிலும் சிக்கல் நிலவுகிறது. போர் தொடங்குவதற்கு முன்பு இருந்த பிரச்சினைகள் தற்போது மேலும் மோசமடைந்துள்ளன.
பாகிஸ்தானின் முயற்சியால் ஏப்ரல் 8ஆம் திகதி முதல் இரண்டு வார காலப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, பின்னர் அது நீட்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 11 அன்று இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
எனினும், பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதியான உடன்படிக்கை இன்னும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 23 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam