வட மாகாண சுகாதார திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தகவல்களை கோரும் போது சட்டத்தின் பிரகாரம் தகவல்களை வழங்க முடியுமாயின் அதனை வழங்க வேண்டுமே தவிர மாறாக தகவல் அறியும் ஆணைக்குழுவின் ஆலோசனையை பெற்று தகவல்களை வழங்குவதாக கோரிக்கையாளாருக்கு அறிவிக்க முடியாது என தகவல் அறியும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் ஆணைக்குழுவில் இன்றைய தினம் (27.07.2023) இடம்பெற்ற விசாரணை ஒன்றின் போதே ஆணைக்குழு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
கடந்த 20.02.2023 அன்று வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்திடம் ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கை, மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு பிரதியிடப்பட்டுள்ளது.
அதன் பிரதி ஒன்றை கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இதற்கு பதிலளித்த மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் தகவல் அறியும் அலுவலர், குறித்த தகவலை வழங்குவது தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. எனவே ஆலோசனை கிடைக்கப்பெற்றதன் பின்னர் தகவல் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த பதிலானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு மாறானது என்பதனால் ஊடகவியலாளர் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் 04.04.2023 அன்று முறையிட்டிருந்தார்.
அதற்கமைவாக இன்றைய தினம் விசாரணையை மேற்கொண்ட தகவல் அறியும் ஆணைக்குழு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கத்திற்கு மேற்படி அறிவித்தலை வழங்கியுள்ளது.
அத்தோடு, வரும் செம்ரெம்பர் மாதம் முதலாம் திகதிக்கு முன் ஊடகவியலாளர் கோரிய தகவலை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
