இந்தியாவின் கிடுக்குப்பிடி! ஆர்.எஸ்.எஸ் - மோடியிடம் கையேந்தும் இலங்கையின் முக்கிய புள்ளிகள் (VIDEO)
உத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகளும்,இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்து கடன் கோரியிருந்தமையும்,தமிழ் கட்சிகள் அனுப்பிய கடிதத்தின் பின் விளைவும் இலங்கை அரசாங்கத்திற்கு இறுக்கமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளி கட்சியான ரெலோ அமைப்பின் ஊடகப்பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இந்தியாவிடம் கையேந்தும் இலங்கையின்அரசியல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கத்திற்கு சார்பாக ஐ.நா செயற்படுவதாக இலங்கை அரசு ஒரு கற்பனை வாதபோக்கில் செயற்பட்டு வரும் நிலையில், தற்போது ஐ.நா அமர்வில் பொறுப்புக்கூறலுக்கான நிதி விசாரணையில் ஆதாரங்களை திரட்டும் செயன்முறையை வெளிநாட்டு அமைச்சர் நிராகரித்தமையானது அவர்களுக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் நிலைமைகள் இன்னும் கடுமையாக மோசமடையலாம் என இலங்கை அரசு அச்சமடைந்துள்ள நிலையில்,பல நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளமையை அரசு தமக்கு சாதகமாக நினைத்துக்கொண்டுள்ளது.இருப்பினும் அடுத்த பிரேரணையில் அதற்கான மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை அரசு இந்திய அரசாங்கத்திடம் 15 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கோரியிருந்த நிலையில்,இலங்கை தூதரிடம், தாங்கள் கேட்கும் அளவிற்கு உதவ முடியாவிட்டாலும், 'உதவி செய்கிறேன்' என பாகவத் வாக்கு கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு இந்தியாவின் பிரதமர் வருதை தரவுள்ள நிலையில், இலங்கையின் தமிழ்க்கட்சிகள் கூட்டாக இணைந்து இந்தியாவிற்கு அனுப்பியுள்ள கடிதமானது இலங்கையின் தற்போதைய அரசியல் தாக்கத்திற்கு கடும் நெருக்கடியாக அமையும் என்றுமு் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam