போதைப்பொருட்களுடன் கைதான 22 பிக்குகள் : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
தாய்லாந்தில் இருந்து ரூ.110 கோடி பெறுமதியான குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்களை இலங்கைக்கு கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபாணி அபேசேகர உத்தரவிட்டுள்ளார்
குறித்த உத்தரவானது இன்று (12.05.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர் விசாரணைகளின் அடிப்படையில்
கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி தாய்லாந்தில் இருந்து இலங்கை வந்த 22 பிக்குகளின் பயணப்பொதிகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சோதனையிட்டனர்.
இதன்போது, மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி சுமார் 110 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசாரணைகளின் அடிப்படையில் பின்வரும் தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன
அதனடிப்படையில், இந்த கடத்தல் நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட அங்குணகொல அமிதானந்த தேரர் என்ற பிக்குவும் பின்னர் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்த கடத்தல் குழுவின் முக்கிய நபராகக் கருதப்படும் சந்திரகுமார தயாரத்ன என்பவர் கைது செய்யப்பட்டு, கடுவலை நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இரண்டு பிக்குகள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அவர்களுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணைக்கு பின்னரே அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
You may like this..
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam