அரசியலமைப்பின் ஏற்பாடுகளை மீறி செயற்பட்ட மைத்திரி! பகிரங்க குற்றச்சாட்டு
ரோயல் பார்க் கொலைக் குற்றவாளி ஜூட் சமந்தவுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக் கொடுப்பதில் தேரர்களுடன் பேராயர்களும் இணைந்து செயற்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டிருந்த ரோயல் பார்க் கொலைச் சம்பவத்தின் குற்றவாளியான ஜூட் சமந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார்.
இந்நிலையில் குறித்த பொது மன்னிப்பு விவகாரத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து தொடரப்பட்டுள்ள ஆட்சேப வழக்கு நேற்று(12.06.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மைத்திரி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இதன்போது, குறித்த விடயத்தில் ஏராளமான பௌத்த தேரர்கள் மாத்திரமன்றி கிறித்தவ பேராயர்கள் சிலரும் அது தொடர்பில் அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் அரசியலமைப்பின் ஏற்பாடுகளை மீறிய வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விவகாரத்தில் செயற்பட்டுள்ளமையும் நேற்றைய தினம் சட்டமா அதிபர் தரப்பினால் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதன்போது முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்த்தன, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விவகாரத்தில் பிழையாக வழிநடத்தப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் வழக்கு அடுத்த தவணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan