தைத்திருநாளை முன்னிட்டு தமிழர் பகுதியில் மாபெரும் படகோட்ட போட்டி
திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் தைத்திருநாளை முன்னிட்டு மாபெரும் படகோட்ட போட்டியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாண ஆளுனர் செயலகம் ஏற்பாடு செய்த குறித்த படகோட்ட போட்டியானது நேற்று(06.01.2024) கிண்ணியா பாலத்தருகே இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா, துறையடி கடற் பகுதியில் இருந்து கிண்ணியா, பூங்கா வரை கடல் வழியாக இப் படகோட்டப் போட்டி நடைபெற்றுள்ளது.
படகோட்ட போட்டி
இதன்போது 55 படகுகளுடன் 110 போட்டியாளர்கள் பங்கேற்றிய இப் படகோட்ட போட்டியில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாயர்கள் திரண்டு இருந்தாக கூறப்படுகின்றது.
இதேவேளை இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் வெங்கடேஸ்வரன் பங்கேற்றதுடன்,படகோட்ட போட்டியை ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் டாக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் போட்டியை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
மேலும் இப்போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக 100,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 50,000 ரூபாவும், மூன்றாம் பரிசாக 25,000 ரூபாயும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
