கிண்ணியாவில் பழுதடைந்த காய்கறிகள் விற்பனை : மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கை
திருகோணமலை - கிண்ணியா நகர சபைக்குட்பட்ட வாராந்த பொதுச் சந்தையில் பாவனைக்கு உதவாத காய்கறிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையிலான குழுவினர் திடீர் விஜயம் ஒன்றை இன்று(03.1.2026) மேற்கொண்ட போது குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தவிசாளரின் அதிரடி நடவடிக்கை
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பழுதடைந்து, பாவணைக்கு உதவாது என கழிக்கப்பட்ட ஆடு, மாடு, பன்றிகளுக்கு என கொட்டப்படுகின்ற கிழங்கு, வெங்காயம், காய்கறிகளை வகைகளை சில வியாபாரிகள் சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

அதே போன்று இன்னும் சிலர், இது போன்ற காய்கறிகளை வாங்கி, வீட்டில் வைத்து அதனை சுத்தம் செய்து உணவகங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதாகவும் பொது மக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தவிசாளர், கிண்ணியா நகர சபையின் குத்தகைக்கு வழங்கப்பட்ட வாராந்த சந்தைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு, அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.



உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam