கொவிட் தடுப்பூசி பிரச்சனையால் பாரிய நெருக்கடியில் ரோஸி சேனாநாயக்க
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பெருமளவு மக்களுக்கு முதல் தடுப்பூசியாக எஸ்ட்ராசெனிக்கா வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்ட ஒரு லட்சம் மக்களுக்கு அதன் இரண்டாவது தடுப்பூசியை வழங்க முடியாத நிலையில் உள்ளமையினால், தான் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்ட்ராசெனிக்கா முதலாவது தடுப்பூசியை பெற்ற மக்கள் அதன் இரண்டாவது தடுப்பூசியை எப்போது பெறுவதென தான் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வினவியதாக அவர் கூறியுள்ளார். எனினும் உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் நேற்று ஊடகத்திடம் கருத்து வெளியிடும் போது மேயர் ரோஸி சேனாநாயக்க இந்தத் தகவலை வெளியிட்டார்.
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan