ஏப்ரல் மாதம் அளவில் நாடு நெருக்கடியை எதிர்நோக்குமா?
எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடு நெருக்கடியை எதிர்நோக்கும் என மக்கள் கூறுவதாக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வர்த்தக பணிகளுக்காக வெளிநாடு சென்று அண்மையில் திரும்பியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெரும் நெருக்கடியில் சிக்கிய இலங்கை
இந்த நிலையில், தான் சந்தித்த பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நாடு விழுந்து விடும் என கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட ரீதியில் இந்த நாடு விழுவதனை தான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடு விழுகின்றது என்றால் உண்மையில் அதிலிருக்கும் மக்களுக்கே அதன் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே அரசாங்கம் எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நாடு நெருக்கடிக்குள் செல்வதனை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த அரசாங்கம் யோசித்து செயல்பட வேண்டும் என்பதே தம்முடையய ஆலோசனை என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam