யாழில் சகோதரனின் வீட்டில் கூரை வேலை செய்தவருக்கு நேர்ந்த அவலம்!
யாழில் சகோதரனின் வீட்டு கூரை வேலை செய்தவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
மானிப்பாயைச் சேர்ந்த சிவநாயகம் சுவீஸ் (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 3ஆம் திகதி சகோதரனின் வீட்டு கூரை வேலை செய்வதற்கு சென்றுள்ளார்.
உயிரிழப்பு
இதன்போது, அங்கு கூரை வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தவேளை கூரை மரம் முறிந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் இன்று(9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
