ருமேனியா மருத்துவமனையில் தீ விபத்து - 7 பேர் மரணம்
ஐரோப்பிய நாடான ருமேனியாவின் தென்கிழக்கே அமைந்துள்ள கான்ஸ்டெண்டா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
குறித்த மருத்துவமனையில் கோவிட் நோயாளிகள் உள்பட 113 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக மருத்துவமனை வளாகம் முழுவதும் புகைமூட்டமாகக் காணப்பட்டுள்ளதுடன், தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மருத்துவமனையில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri