தமிழீழ விடுதலைப் புலிகளை கொண்டு வர சாணக்கியன் முயற்சி - சபையில் கூச்சலிட்ட ரோஹித்த
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை கடுமையாக சாடியுள்ளார்.
சாணக்கியன் டொலர்களுக்காக நாடாளுமன்றில் கூச்சலிடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் சாணக்கியனை ரோஹித்த அபேகுணவர்தன இவ்வாறு கடுமையாக திட்டியுள்ளார்.
தமிழில் ஒன்றையும் சிங்களத்தில் ஒன்று
அவர் மேலும் கூறுகையில், சாணக்கியன் ஒரு விடுதலைப் புலி எனவும் பயங்கரவாதத்தையே கக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழில் ஒன்றையும் சிங்களத்தில் ஒன்றையும் சாணக்கியன் கூறுவதாக தெரிவித்துள்ளார். மீண்டும் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை கொண்டு வர முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
முழுமையாக இனவாத அடிப்படையில் பேசுவதாகவும், நிலக்கண்ணி வெடிகளை அகற்றிய கௌரவத்தை கூட வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சாணக்கியன் தேசத்துரோக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam