ரோஹித ராஜபக்சவுக்கு சொந்தமான சொகுசு ஹோட்டல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு
ரோஹித ராஜபக்சவுக்கு சொந்தமான சொகுசு ஹோட்டல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் குழுவினரால் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் இன்று முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இன்று முன்னிலையான சட்டத்தரணி பஷீர் மொஹமட் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
"ராஜபக்ச தலைமையிலான குழுவினர் இந்த நாட்டிற்கு செய்த அநியாயங்கள் இப்பொழுது சரி நாட்டு மக்கள் மத்தியில் வெளியில் கொண்டுவரப்பட வேண்டும்.
அதற்கான முயற்சியை காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் ஒரு குழுவினர் செய்து வருகின்றனர். அவர்களுக்கான ஆதரவினை நாங்கள் வழங்கி வருகின்றோம்.
போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட சொகுசு ஹோட்டல்
சிங்கராஜாவுக்கு அருகாமையில் கொலன்னா, எம்பிலிப்பிட்டிய கொங்கலகந்தவில் அமைந்துள்ள சொகுசு ஹோட்டல் ஒன்று மே 10 அன்று போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
உடனேயே, அந்த ஹோட்டல் மகிந்த ராஜபக்சவின் மகன்களில் ஒருவருக்கு சொந்தமானது என்று தகவல்கள் வெளியாகின.
அது, இரண்டாவது மகனான யோசித்த ராஜபக்சவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை அவர்கள் மறுத்திருந்தனர்.
விசாரணையில் வெளியான தகவல்
பின்னர் அதற்கான விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோது அது ரோஹித ராஜபக்சவுக்கு சொந்தமானது என தெரிய வருகின்றது.
அவர் இதுவரை எவ்விதமான ஒரு பெரிய தொழிலையும் செய்ததில்லை.
அப்படியிருக்கும் போது இந்த காசு எப்படி கிடைத்து என்பதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்பதை முன்னிறுத்தியே நாங்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு இன்று வருகை தந்து முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளோம்” என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
