ஊழல் விசாரணைக்கு உள்வாங்கப்பட்டுள்ள ரோஹித போகொல்லாகம
இலங்கையில் ஊழல் எதிர்ப்பு செயற்பாடுகளில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துகிறது.
இதன் அடிப்படையில், நீதியமைச்சுக்கு உட்பட்ட நிறுவனங்கள், நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இதன் காரணமாக, பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சட்டத்துக்கு முன்னால் நிறுத்தப்பட்டு வருகின்றனர்.
வெளிநாட்டில் வசித்து வருவதால்
அந்தவகையில் முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு எதிராகவும் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏற்கனவே அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழலுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
எனினும் அவர் வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதால் அவரின் பிரசன்னம் இல்லாமலேயே வழக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் இணங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




