டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மாவின் ஓய்வு தொடர்பான தகவல்
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார், ஆனால் அவர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு 38 வயதான ரோஹித் சர்மா நியமிக்கப்படமாட்டார் என்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரோஹித் இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், 2022 இல் இருந்து, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்டு வருகிறார்.
தலைமை பதவிக்கு ஆபத்து
12 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த ஆண்டு, இந்திய மண்ணில் வைத்து நியூசிலாந்திடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தமை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போர்டர்-கவாஸ்கர் கிண்ணத்தில் 3-1 என்ற கணக்கில் தோல்வி என்பன ரோஹித்தின், தலைமை பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தின.
மோசமான துடுப்பாட்டம் காரணமாக, சிட்னியில் நடந்த தீர்க்கமான ஐந்தாவது டெஸ்டில் இருந்து ரோஹித் நீக்கப்பட்டார் என்பதும் முக்கிய விடயமாக அமைந்திருந்தது.
வலது கை துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா, 12 சதங்களுடன் 40.57 சராசரியாக 4,301 டெஸ்ட் ஓட்டங்களை எடுத்துள்ளார்.

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
