விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள இந்திய -அவுஸ்திரேலியாவின் இறுதி டெஸ்ட் ஆட்டம்
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் அவுஸ்திரேலிய அணி, தமது முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கட் இழப்புக்கு 9 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்று மேலும் விக்கட்டுக்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.
முன்னதாக இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 185 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்ததது.
ஐந்தாவது டெஸ்ட்
இந்தநிலையில் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தலைமையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக துடுப்பாட்டத்துக்கு சுப்மன் கில் களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், பும்ரா அணியின் தலைமையை ஏற்றுள்ளார்.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அவுஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணத்தில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமநிலையில் தக்க வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |