ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விக வேண்டும் - ரோஹன லக்ஷ்மன் பியதாச
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என அந்த கட்சியின் உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையானால், அரசாங்கத்தில் இருந்தவாறு அரசாங்கத்துடன் பணியாற்ற முடியும்.
ஏனையோர் அரசாங்கத்தில் இருந்து விலகி சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.
அரசாங்கத்தின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் சுதந்திரக் கட்சி தற்போது அரசாங்க நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதால், கிராமங்களில் உள்ள கட்சியினரை எதிர்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் ரோஹன பியதாச குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இது சம்பந்தமாக மற்றுமொரு நாளில் கலந்துரையாடி தீர்மானிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து கலந்துரையாட ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 20 மணி நேரம் முன்
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam