உரப்பையால் முகத்தை மூடி பல லட்சம் ரூபாய் கொள்ளை: சந்தேகநபர் கைது
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புனானை பிரதேசத்திலுள்ள பலசரக்கு கடை ஒன்றின் கூரையை உடைத்து அங்கிருந்த 3 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பணம் மற்றும் இரண்டு பன்டல் சிகரெட் என்பவற்றை திருடிச் சென்ற ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரிதிதென்னையில் வைத்து சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை கடையை திறந்த போது கடையின் கூரையை உடைத்து பணம் மற்றும் சிகரெட் என்பன திருடப்பட்டுள்ளதை கண்ட கடை உரிமையாளர் பின்னர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பொருத்தியுள்ள சிசிரி கமராவை சோதனையிட்டபோது அதில் முகத்தை ஊரப் பையால் மூடியவாறு கொள்ளையன் கொள்ளையிட்டுள்ளது தெரியவந்த நிலையில் தொடர் விசாரணையில் குறித்த கொள்ளையனை கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் ரிதிதென்னை ஜெயந்தியால பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும் ஏற்கனவே மடிகணணி, மற்றும் பல கொள்ளை சம்பவங்களில் தொடர்புபட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சந்தேகநபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: நான்காம் இடத்தில் உச்சம் பெறும் குரு! மேஷத்துக்கு ஜாக்பாட் உறுதி Manithan