யாழில் தனிமையில் சென்ற நபரிடம் வழிப்பறி
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் தனிமையில் சென்ற நபரிடம், முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கொள்ளை சம்பவம்

நேற்று முன்தினம் இரவு 7மணியளவில் ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியால் பயணித்த நபரிடம் மோட்டார் வண்டியில் முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி 15000 ரூபா வரையான பணம் உட்பட உடைமையில் வைத்திருந்த ஆவணங்களையும் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
பொலிஸாரின் கவனயீனம்

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைவெளி உட்பட பல்வேறு பகுதியில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து செல்வதுடன் அதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் அக்கறையின்றி
காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam