வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் பத்து லட்சம் பணம் கொள்ளை
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்து பத்து லட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
சுற்றுலா மேற்கொண்டு இலங்கை வருகை தந்த கட்டாரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ரயிலில் பயணித்த போது பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் மற்றும் கட்டார் ரியால் உள்ளிட்ட நாயணத்தாள்கள் அடங்கிய சுமார் பத்து லட்சம் இலங்கை ரூபா மதிப்புடைய பணம் இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
கொள்ளை சம்பவம் தொடர்பில் முறைப்பாடு
வெளிநாட்டு நாணயத்தாள்கள், மடிக்கணனி, பவர் பேங்க் உள்ளிட்டன போட்டு வைக்கப்பட்டிருந்த பயணப்பை கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வெளிநாட்டுப் பிரஜை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நபரிடமிருந்து பணம் கொள்ளையிட்ட நபரை அடையாளம் கண்டு, கைது செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தியதலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
