யாழில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்! பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்தல்
யாழ்.சுன்னாகம் மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் யாழ்.காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டி பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவரின் வீட்டினுள் புகுந்து சுமார் 5 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிதரஷன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், நடத்திய விசாரணைகளில் அளவெட்டி பகுதியை சேர்ந்த 21 வயது மற்றும் 25 வயதான இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளையடித்த இலத்திரனியல் பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் தெல்லிப்பழை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் கைதான சந்தேகநபர்கள் சுன்னாகம் - தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக கூறியுள்ள பொலிஸார். மேற்படி இரு பொலிஸ் பிரிவுகளிலும் அண்மைய நாட்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 10 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
