உங்கள் வீட்டிற்கும் இப்படியான திருடர்கள் வரலாம்! திரைப்பட பாணியில் பிடிக்கப்பட்ட திருடி(Video)
நாட்டில் புதிய வழிகளில் திட்டமிட்டு கொலை, கொள்ளை என சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நடவடிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
இவ்வாறான சூழலில் இன்றைய தினம்(05.03.2023) காலை திரைப்பட பாணியில் வத்தளையில் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வீட்டு வேலைக்கு ஆள் தேவையென பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கப்படும். இந்த விளம்பரங்களின் அடிப்படையில் குறித்த வீடுகளிற்கு செல்லும் சிலர் வீட்டில் உள்ள பெறுமதியான ஆபரணங்கள் , பணங்களை கொள்ளையடித்து செல்பவர்களாக இருக்கின்றார்கள்.
இவ்வாறான ஒரு பின்னணியில் பல இடங்களில் திருட்டு வேலைகளை செய்த ஒரு பெண், வத்தளையில் ஒருவரின் வீட்டில் வேலை தேடி சென்ற போது அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னர் பொலிஸார் ஊடாக குறித்த பெண் பற்றிய விபரங்களை அறிந்த வீட்டின் உரிமையாளரின் உதவியுடன் பொலிஸாரும் இணைந்து அவரை கைது செய்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட பெண் இதேபோன்று பல வீடுகளில் வீட்டுப் பணிபெண்ணாக வேலை செய்ய வருவதாகவும் கூறியுள்ளார். அவர்களுடன் தொலைப்பேசி அழைப்புகளையும் ஏற்படுத்தியுள்ளார்.
எனவே இவ்வாறு வீட்டு பணிபெண் எனும் போர்வையில் திருட்டில் ஈடுப்படுபவர்கள் தொடர்பில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான முழு விபரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்,