கொழும்பில் கோடீஸ்வரரின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் அட்டகாசம்
கொழும்பு, பொரளை லேக் டிரைவ் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர சீன வர்த்தகர் ஒருவரின் வீட்டில் அடையாளம் தெரியாத மூவரால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 19ஆம் திகதி இரவு Su Zu Qing என்ற 38 வயதான வர்த்தகர் ஒருவரின் வீட்டிலேயே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
தொழிலதிபரின் வீட்டிற்குள் நுழைந்த மூன்று கொள்ளையர்கள் வர்த்தகர், அவரது மொழிபெயர்ப்பாளர் மற்றும் சமையல்காரர் ஆகியோரை தாக்கியுள்ளனர்.
கொலைமிரட்டல்
துப்பாக்கியைக் காட்டி கொலைமிரட்டல் விடுத்ததுடன் கை, கால்களையும் கட்டிவிட்டு திருடியுள்ளனர்.
இதன்போது டொலர் உட்பட பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்கள் 11 கையடக்க தொலைபேசிகள், 07 மடிக்கணினிகள், கைக்கடிகாரம், உள்ளூர் நாணயம், 05 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், சிசிடிவி அமைப்பின் டிவிஆர் பகுதி உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.