கண்டியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளை
கண்டி - நத்தரான்பொத பிரதேசத்தில் ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டில் இருந்து ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம், பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் இருபதாயிரம் பெறுமதியான வாசனை திரவிய போத்தல் என்பன திருட்டுப் போயுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபரைக் கண்டறிய கண்டி அஸ்கிரிய பொலிஸ் நாய் பிரிவின் மோப்ப நாய் "ஏகர்" பயன்படுத்தப்பட்டது.
வாசனை திரவிய போத்தல் அடங்கிய பெட்டியை மோப்பம் பிடித்த பொலிஸ் நாய் மூன்று கிலோமீட்டர் தூரம் கடந்து ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளது. எனினும் அதன்போது வீட்டின் உரிமையாளர் அங்கு இருக்கவில்லை.
சந்தேகநபர் தலைமறைவு
வீட்டிற்குள் நுழைந்த பின்னர் பொலிஸ் மோப்ப நாய் வீட்டின் அறையொன்றின் தரையில் இருந்து பலகையொன்றின் மீது படுத்துக் கொண்டுள்ளது.
வீட்டின் உரிமையாளரான சந்தேகநபர் இரவில் இந்த பலகையில் தூங்குவதாக வீட்டில் உள்ளவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைத் தேடி பொலிஸ் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.