தென்னிலங்கையில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிங்கிரிய வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இருந்த பெண்ணின் கைகளையும் வாயையும் கட்டி மோட்டார் சைக்கிள் மற்றும் தங்க ஆபரணங்களை திருடி தப்பிச் சென்ற இருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஹல்மில்லவெவ-கனேகொட பகுதியைச் சேர்ந்த பத்மா ரோஹினி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் கொள்ளை
கடந்த 20ஆம் திகதி காலை வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத இருவர் வலுக்கட்டாயமாக தனது கை, கால், வாயைக் கட்டிவிட்டு தன்னிடம் கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருந்த 3,75,000 ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் மற்றும் 1,50,000 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
முறைப்பாட்டாளரின் வீட்டின் ஜன்னலுடன் பொருத்தப்பட்டிருந்த கம்பியை அகற்றி கொள்ளையர்கள் அத்துமீறி நுழைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.