பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரின் மனைவியின் வீட்டில் கொள்ளை
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனின் மனைவிக்கு சொந்தமான வீட்டை உடைத்து பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் நபரை, கொள்ளையிடப்பட்ட பொருட்களுடன் கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரவு வீட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை
கண்டி, வேவெல்பிட்டிய,லேடி கோடின் மாவத்தையில் (பழைய ஓடியன் தியேட்டருக்கு அருகில்) அமைந்துள்ள வீட்டை இரவு நேரத்தில் உடைத்து வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த இரண்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள், பெரிய தொலைக்காட்சி பெட்டி ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதனடிப்படையில், அந்த பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி. கெமராவை ஆய்வு செய்த போது, சந்தேக நபர் கொள்ளையிட்ட பொருட்களை எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்துள்ளது.
இதனையடுத்து கண்டி மய்யாவ பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரை கொள்ளையிடப்பட்ட பொருட்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.