புதையல் இருப்பதாக கூறி, பாம்பை வைத்து இடம்பெற்ற கொள்ளை!

CID - Sri Lanka Police Anuradhapura Sri Lanka
By Sivaa Mayuri Dec 03, 2024 06:45 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in சமூகம்
Report
Courtesy: Sivaa Mayuri

வீட்டுத் தோட்டத்தில் போலியான இரத்தினக் கற்களை புதைத்து வைத்துவிட்டு, மோசடியில் ஈடுபட்ட ஜோதிடர் ஒருவர், மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தோட்டத்தில் புதையல் புதைக்கப்பட்டிருப்பதாக, வீட்டு உரிமையாளர் ஒருவரை தவறாக வழிநடத்தி, அதை வெளிக்கொணரும் சடங்குகளை மேற்கொண்ட ஜோதிடர் ஒருவரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், புதையல் தோண்டியதற்கான பகுதிக் கொடுப்பனவாக 2.9 மில்லியன் ரூபாய் பணத்தை ஏமாற்றி பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படகிறது.

தமிழர்களை தவிர்த்த கோட்டாபயவிற்கு நேர்ந்த கதி! எச்சரிக்கும் சிறீதரன்

தமிழர்களை தவிர்த்த கோட்டாபயவிற்கு நேர்ந்த கதி! எச்சரிக்கும் சிறீதரன்

2.9 மில்லியன் ரூபா

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

அனுராதபுரம் விமான நிலைய வீதியைச் சேர்ந்த 70 வயதுடைய வர்த்தகரே இந்த சம்பவத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார்.

புதையல் இருப்பதாக கூறி, பாம்பை வைத்து இடம்பெற்ற கொள்ளை! | Robbery Committed With A Snake As A Guard

முன்னதாக, குறித்த வீட்டின் உரிமையாளர் நேற்று முன்தினம் தனது உழவு இயந்திரத்தை 2.9 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார்.

இதனையடுத்து, விற்பனை செய்த பணத்தை அவர் வீட்டில் வைத்திருந்தநிலையில், உழவு யந்திரத்தை கொள்வனவு செய்தற்காக வந்ததாக கூறிய ஒருவர் தம்மை ஜோதிடர் என்று தம்மை அறிமுகப்படுத்தியுள்ளார்.

மக்கள் நிராகரிக்கும் அரசியல் கலாசாரம்! மாற்றம் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

மக்கள் நிராகரிக்கும் அரசியல் கலாசாரம்! மாற்றம் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

போலி ரத்தினக் கற்கள்

அத்துடன் வீட்டுக்குள் நுழையும் போதே, தோட்டத்தில் புதையல் புதைக்கப்பட்டிருப்பதை தாம் உணர்வதாக வீட்டு உரிமையாளரிடம் கூறியுள்ளார். இதனை வீட்டு உரிமையாளரையும் நம்ப வைத்துள்ளார்.

புதையல் இருப்பதாக கூறி, பாம்பை வைத்து இடம்பெற்ற கொள்ளை! | Robbery Committed With A Snake As A Guard

பின்னர், இரவில் இரகசியமாக தோட்டத்திற்குள் நுழைந்து போலி ரத்தினக் கற்களை புதைத்துவிட்டு, மறுநாள் வீட்டின் உரிமையாளரைச் சந்தித்து புதையல் தோண்ட ஏற்பாடு செய்துள்ளார்.

தன்னுடன் உதவியாளராக அழைத்து வந்திருந்த பாம்பு பிடிப்பவர் ஒருவரின் உதவியுடன் ஜோதிடர் புதையல் தோண்டும்போது ரகசியமாக வீட்டுத் தோட்டத்தில் நாகப்பாம்பை காட்டி, புதையலைக் காக்கும் ஆவிதான் அது என்று உரிமையாளரிடம் கூறி, அதனையும் நம்ப வைத்துள்ளார்.

இந்தநிலையில், சந்தேக நபர் சடங்குகளை செய்து போலி ரத்தினக் கொத்தை தோண்டி எடுத்ததுடன், நாகப்பாம்பு புதையலைக் காக்கும் ஆவி என்றும் அதைக் காயப்படுத்தக்கூடாது என்றும் கூறி, வீட்டின் உரிமையாளரை பயமுறுத்துவதற்காக, பாம்பு பிடிப்பவரின்; உதவியுடன் நாகப்பாம்பை வீட்டிற்குள் வைத்துள்ளார்.

அத்துடன் தோண்டி எடுத்த போலி ரத்தினகற்களின் மதிப்பு 40 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என வீட்டு உரிமையாளரிடம் அவர் கூறியுள்ளார் எனவே புதையலை தோண்டுவதற்கு தனது பங்காக 5 மில்லியன் ரூபாய்களை தரவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை! பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை! பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

பெரும் அதிர்ஷ்டம்

இந்தநிலையில் பெரும் அதிர்ஷ்டம் வந்து விட்டதாக மகிழ்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், உழவு இயந்திரத்தை விற்றதன் மூலம் தனக்குக் கிடைத்த 2.9 மில்லியன் ரூபாயை போலி ஜோதிடரிடம் கொடுத்ததுடன்,இரத்தினக் கற்களை விற்ற பின்னர் மீதித் தொகையை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

புதையல் இருப்பதாக கூறி, பாம்பை வைத்து இடம்பெற்ற கொள்ளை! | Robbery Committed With A Snake As A Guard

இதன்போது, அநுராதபுரம் ருவன்வெலிசாயவில் இரத்தினக் கற்களை எடுத்துச் சென்று ஆவிகளை மகிழ்விக்கும் வகையில் சமயச் சடங்குகளை மேற்கொள்ளுமாறும், அதுவரை வீட்டில் உள்ள விகாரைக்கு அருகில் இரத்தினக் கற்களை வைத்து வழிபடுமாறும் ஜோதிடர் அவருக்கு ஆலோசனை வழங்கி, ஓரிரு நாட்களில் தாம் வருவதாகவும் உறுதியளித்து சென்றுள்ளார்.

இருப்பினும், ஜோதிடர் கூறிய தினத்தில் வராததால், வீட்டின் உரிமையாளர் நகைக்கடைக்காரர் ஒருவரால் இரத்தினக்கல் ஒன்றைப் பரிசோதித்தபோது, அது போலியானது என்பதை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், ஒரு கொள்ளைக்காரனுக்கு இரையாகிவிட்டதாக வெட்கப்பட்ட அவர், ஒரு கொள்ளைக்காரன், ஒருவன் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து துப்பாக்கி முனையில் 2.9 மில்லியன் ரூபாயை கொள்ளையிட்டு சென்றதாக பொலிஸில் பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளார்.

இருப்பினும், முறைப்பாட்டின்; நம்பகத்தன்மையை சந்தேகித்த பொலிஸார் விசாரணை நடத்தியபோது, குறித்த வீட்டு உரிமையாளர்; உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW                    
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US