கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் கொள்ளை தொடர்பாக வெளியான தகவல்
கதிர்காம கந்தன் ஆலயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் 38 பவுன் தங்க நகைகொள்ளை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கதிர்காம காவல்துறையை கோடிட்டு இந்த சம்பவம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம் பெற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் காவல்துறை அதிபரின் பணிப்பின் கீழ் காவல்துறை குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எனினும் எமது செய்தி சேவை சம்பவம் தொடர்பில் கதிர்காம காவல்துறையை தொடர்பு கொண்டு வினவிய போது அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைபாடுகள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை கதிர்காம முருகன் ஆலயத்துடன் எமது செய்தி சேவை தொடர்பு கொண்ட போது பதில் கூறக்கூடிய
அதிகாரி ஒருவர் தற்போது இல்லை என்று பதிலளிக்கப்பட்டது.
