வர்த்தகர் வீட்டில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை
கற்பிட்டி - நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவக்கடுவ, காலனி பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரக்கறி விற்பனையில் ஈடுபடும் குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு நேற்று(2) அதிகாலை கைத்துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஆயுத குழுவினர் சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
பின்னர் குறித்த வர்த்தகரின் மனைவி மற்றும் பிள்ளைகளை பணய கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஆயுத குழுவினர், அவர்களை கொலை செய்யப் போவதாக மிரட்டியதுடன், வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை வலுக்கட்டாயமாக திறந்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த சுமார் 70 பவுன் தங்க நகைகள் மற்றும் 30 இலட்சம் ரூபா பணம் என்பனவற்றை கொள்ளையடித்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .





வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri
