அவுஸ்திரேலிய பௌத்த கோவிலில் திருட்டு: சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு
அவுஸ்திரேலிய அடிலெய்டில் அமைந்துள்ள இலங்கை பௌத்த கோவிலில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை அந்நாட்டின் பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிசிடிவி கருவியில் உள்ள அசல் காட்சிகளை காவல்துறையினர் கோரியுள்ளதாக கோவிலின் முகாமைத்துவ குழுவைக் கோடிட்டு கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
திருட்டில் ஈடுபட்டவர், ஒரு சிசிடிவி கருவியில் மட்டுமே தோன்றுவதாகவும் மற்ற கருவிகளில் அவரின் தோற்றம் தெரியவில்லை என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
பௌத்த விகாரை
அடிலெய்டில் உள்ள இலங்கை பௌத்த விகாரையில் கடந்த வெள்ளிக்கிழமை வழிபாட்டாளர்களிடமிருந்து கிடைத்த நன்கொடை பணம் திருடு போயுள்ளது.
இதன்போது 3,000 அவுஸ்திரேலிய டொலர்கள் திருடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தெற்கு அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள மற்றுமொரு பௌத்த விகாரையிலும் சுமார் 800 டொலர்கள் பணம் அண்மையில் திருடப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




