யாழில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்:எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை
யாழ்.கொக்குவில் -கேணியடி பகுதியில் உள்ள வீடொன்றின் ஜன்னல் வழியாக தொலைபேசி மற்றும் பணம் ஆகியன திருடிச் செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குடியிருப்புக்கள் அதிகமான கேணியடி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த திருடன் வீட்டு ஜன்னலை திறந்து உள்ளே இருந்த பெறுமதியான தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளான்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

சம்பவம் தொடா்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இவ்வாறான திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கேணியடி பகுதியில் தொடா்ச்சியாக திருட்டுச் சம்பவங்கள்
இடம்பெற்றுவரும் நிலையில் பொலிஸாா் உாிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri